கோவை ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு பகலாக பணியாளர்கள்

கோவை ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு பகலாக பணியாளர்கள் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 72 ரயில்கள் மற்றும் 25 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையத்தில், நடைமேடைகள்,கழிவறைகள்,தண்டவாளங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் சுழற்சி முறையில் 46 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு பயணிகள் பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு மூன்றாவது நுழைவாயில் அமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version