கோவை சிறுமி வழக்கு : குற்றவாளிக்கு பொதுமக்கள் தர்ம அடி

கோவை மாவட்டம், துடியலூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதாகியுள்ள சந்தோஷ் குமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். கோவை மாவட்டம், துடியலூரில் 6 வயது சிறுமி கடந்த மாதம் 26-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தோஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே கோவை மருத்துவமனைக்கு சந்தோஷ்குமாரை ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் அழைத்து செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர்.

Exit mobile version