கோவை மாவட்டம் உதயமாகி இன்றுடன் 214 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பவானியை தலைமையிடமாக கொண்டு வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு தென்கொங்கு என்று இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை, ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இன்றுடன் 214 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1804ம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கோவை மாவட்டம் உதயமானது. இதைனையொட்டி, நவம்பர் 24ம் தேதியை கோவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் கோவை தினத்தில் புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. “என்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா…” என்று அழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையின் அடையாளமாக கருதப்படும் நிலையில், அதையும் தாண்டி கோவையின் பாரம்பரியம், தனி அடையாளமாக பிரமிக்க வைக்கிறது.