கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 146 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 145 பேர் குணமடைந்த நிலையில், இறுதியாக சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியும் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் பச்சை நிறத்திற்கு மாறியுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர்
எஸ்.பி. வேலுமணி, தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆலோசனை மேற்கொண்டதும் இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை முறையாக பின்பற்றிய, பொதுமக்களுக்கும், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் சளி, காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.