தென் தமிழகத்தில், வீணாகும் தேங்காய் நீர், பானமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
கோவையில், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில், அதிகப்படியான தேங்காய் உற்பத்தி மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. எண்ணெய் எடுப்பதற்காக தேங்காயை உடைக்கும் போது, அதனுள் இருக்கும் தண்ணீர் வீணாகிறது. இதனால் அப்பகுதியில் மாசு ஏற்படவும்
வாய்ப்புண்டு. இதை தடுக்கும் விதமாகவும், வீணாகும் தேங்காய் நீரை வருவாயாக மாற்றும் விதமாகவும் அந்த நீரை பதப்படுத்தி, புதிய பானமாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தனியார் நிறுவனம் ஒன்று. இந்த பானம், 60நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது இயற்கை முறையில் வருவதால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. ஏற்கனவே கேரளாவில் சிறப்பாக விற்பனையாகிக்கொண்டு இருக்கும் இந்த பானம், தற்போது தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. 200 மில்லி லிட்டர் தேங்காய் நீர் பானம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.