பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக கோகோ-வை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக கோகோ விளங்கிவருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை, திவான் சாபுதூர் ஆகிய இடங்களில் வேளாண்மை தோட்டகலைத் துறை அறிவுறுத்தல் படி சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள், தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக கோகோவை சாகுபடி செய்துள்ளனர். வறட்சி காலங்களிலும் நல்ல விளைச்சல் கிடைப்பதாகவும், சாக்லெட் நிறுவனத்தினர், அறுவடைக்கு முன்பாகவே பதிவு செய்து வாங்கி செல்வதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .
Discussion about this post