திண்டுக்கல் மாவட்டம் குட்டியப்பட்டியில் நடைபெற்ற உலக அளவிலான சேவல் கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சேவல்கள் பங்கேற்றுள்ளன.
குட்டியப்பட்டியில், உலக சேவல் அமைப்பு மற்றும் அனைத்திந்திய சேவல் வளர்க்கும் நண்பர்கள் சார்பில், உலக அளவிலான விசிறிவால் மற்றும் கிளிமூக்கு சேவல் கண்காட்சி நடைபெற்றது.
இதில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மற்றும் துபாய், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சேவல்கள் பங்கேற்றன. இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற, 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான விலை உயர்ந்த சேவல்களை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
அழிவின் விளிம்பில் இருக்கும் சேவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.