காஃபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்குகிறது கோகோ கோலா

சர்வதேச குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, 4 ஆயிரத்து 732 கோடி ரூபாய் மதிப்பிலான காஃபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

மும்பையை சேர்ந்த நிறுவனமான காஃபி டே, நாடு முழுவதும் ஆயிரத்து 752 கிளைகளை கொண்டுள்ளது. முன்னதாக, கோகோ கோலா வாங்கிய ஸ்டார்பக்ஸ், பாரிஸ்டா மற்றும் கோஸ்டா காபி போன்றவற்றுடன் போட்டியிட்டு, காஃபி டே நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வியன்னா, செக் ரிபப்ளிக், மலேசியா, நேபால், எகிப்து உள்ளிட்ட நாடுகளில், காஃபி டே நிறுவனம் தனது கிளைகளை கொண்டுள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விஜி சித்தார்த்தா, காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். கடன் பிரச்சனையால் அவர் நடத்திவந்த மென்பொருள் சேவை நிறுவனமான மைண்ட் ட்ரீ லிமிடெட் நிறுவனத்தில், தனது 20 புள்ளி 32 சதவீத பங்குகளை கடந்த ஆண்டு லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கு விற்ற நிலையில், காஃபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சில பங்குகளையும் அவர் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version