கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி, கவிழ்வதற்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் இரு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் பா.ஜ.கவில் இணையபோவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குமாராசாமியின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏ-க்களை இழுக்க குதிரைப்பேரம் நடப்பதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம், மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.