கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை ஆராய குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, வைப்பு உத்தரவாத நிதியிலிருந்து ஓய்வூதியங்களை வழங்க அரசு சார்பாக அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை வழங்கியது. ஆனால், வைப்பு உத்தரவாத நிதி, உரியவர்களுக்கு திருப்பித்தர மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை ஆராய மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் தலைமையில், 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, ஓய்வூதியங்களை பெறுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் அதனை பெறுவதற்கான வழிவகைகள் குறித்தும், ஓய்வூதியம் பெறுவதற்கான நிதியம் மற்றும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் குறித்தும் ஆராயும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.