அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று தீவிர பிரசாரம்

கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து வேலாயுதம்பாளையம், கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும், சிதம்பரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளிலும் முதலமைச்சர் ஆதரவு திரட்டுகிறார்.

கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து விருதாச்சலத்திலும், விழுப்புரம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் வடிவேல் சரவணனை ஆதரித்து உளுந்தூர்பேட்டையிலும் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து கள்ளக்குறிச்சி, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.

Exit mobile version