புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக 6 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சை வளாகம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.