மழை நிலவரத்தை கவனிக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தென்மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார். மழை நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கவும், தகவல்களை உடனடியாக தரவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மழை நிலவரத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மழை பெய்யும் நிலவரம், அணைகளின் நீர் இருப்பு நிலவரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய வேண்டுமென்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version