பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பணமதிப்பிழப்பு காரணமாக 2 ஆண்டுகள் இந்தியா இருளில் மூழ்கி உள்ளதாக தெரிவித்தார். பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
பிரதமர் கொண்டுவந்த இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்ததற்கு, அவர் முழு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.