கரூரில் மருத்துவக் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி காந்தி கிராமத்தில், 17.45 ஏக்கரில், 269 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில், பல்வேறு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையில் வகுப்புகள் கொண்ட ஆறு மாடிகள் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version