நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் மே 1ஆம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வருகிற மே 1ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், மே 5ஆம் தேதி அரவக்குறிச்சியிலும் 6 ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் பிரசாரம் செய்யும் முதலமைச்சர் மே 14 ஆம் தேதி சூலூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.