வாரிசு இல்லாத ஜனநாயக முறைப்படி நடைபெறும் இயக்கம் அதிமுகதான் – முதலமைச்சர்

நெல்லையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அரசு, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாக கூறினார். வாரிசு இல்லாத, ஜனநாயக முடிறைப்படி நடைபெறும் இயக்கம் அதிமுகதான் என்றும், உழைப்பவருக்கு உரிய மரியாதை அளித்து, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நெல்லை செல்வதற்குமுன் கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பதவிக்கு வரமுடியும் என்றும், ஆனால், அ.தி.மு.க.வில் கடைக்கோடி தொண்டன் கூட விஸ்வாசமாக உழைத்தால் எதிர்காலத்தில் கட்சியில் அவருக்கு உயர் பதவி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version