எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும், தனியார் மண்டபத்திலும் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் திரட்டி ஐம்பதாயிரம் பேருடன் விரைவில் திருப்பூரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி தெரிவித்தார்.