நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்!

நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நீர்வள ஆதாரத்துறையில் 285 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டட அமைப்பில் 125 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதன், அடையாளமாக 7 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோல், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 155 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Exit mobile version