முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயண வழித்தடங்களின் விவரம் வெளியீடு

விக்கிரவாண்டி, நாங்குநேரித் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள வழித்தடங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அக்டோபர் 12, 16, 18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வரும் 16ஆம் தேதி புதன்கிழமை காணை, மாம்பழப்பட்டு, அரியலூர் திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து வரும் 13, 14, 17 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 17ஆம் தேதி வியாழக்கிழமை கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், முன்னீர்ப்பள்ளம், பொன்னாக்குடி, சீவலப்பேரி ஆகிய வழித்தடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அக்டோபர் 12, 16, 18 ஆகிய தேதிகளில் பிரச்சாரம்

அக்டோபர் 12 – முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, வி.சாத்தனூர், புதுப்பாளையம் வழித்தடங்களில் பரப்புரை

அக்டோபர் 16 – காணை, மாம்பழப்பட்டு, அரியலூர்திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் வழித்தடங்களில் பரப்புரை

அக்டோபர் 18 – விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய வழித்தடங்களில் பரப்புரை

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அக்டோபர் 13, 14, 17 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பிரச்சாரம்

அக்டோபர் 13 – ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி ஆகிய வழித்தடங்களில் பரப்புரை

அக்டோபர் 14 திங்கள் – ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய வழித்தடங்களில் பிரச்சாரம்

அக்டோபர் 17 – கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், முன்னீர்ப்பள்ளம், பொன்னாக்குடி, சீவலப்பேரி வழித்தடங்களில் பரப்புரை

Exit mobile version