வேளாண் மண்டல அறிவிப்பு மூலம் முதல்வர் சாதனை படைத்துள்ளார்: அமைச்சர் துரைக்கண்ணு

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு, கும்பகோணத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்ததாகவும், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  காவிரி டெல்டா பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version