நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு, நம்பியாறு நீர் தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடி தண்ணீர் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுமுடியாறு, நம்பியாறு நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்று பிசான பருவ சாகுபடிக்காக கொடுமுடியாறு நீர் தேக்கத்தில் இருந்து நாளை முதல் வரும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் நாங்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்து 780 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இதேபோன்று, நம்பியாறு நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், திசையன்வினை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஆயிரத்து 744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.