ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்றைக்கு மூன்றாவது நாளாக பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதில் உள்ள அகத்தியர் வீதி பகுதியில் பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார். அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித்தலைவர், வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், கே.எஸ். தென்னரசு அவர்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வந்து மக்களுக்கு உதவி புரிவார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிடுபவர் பற்றி உங்களுக்கேத் தெரியும், அவரைப் பார்க்க முடியாது. இந்தத் தொகுதிக்கு அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுள்ளது. ஆனால் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். அதிமுக எதையுமே செய்யவில்லை என்று கூறும் முதல்வருக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியவில்லை. ஆனால் அவர் இந்தத் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. பொய் பேசுகின்ற முதலமைச்சர் இன்றைய பொம்மை முதலமைச்சர். 520 அறிவிப்பு கொடுத்துவிட்டு எதையுமே நிறைவேற்றாமல் 85% நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் பேசுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.