தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் சுற்றுலா நகரமான கன்னியாகுமரி, மக்கள் கூட்டமின்றி பொழிவிழந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரிக்கு மக்கள் செல்லவும், பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் வருகையின்றி கன்னியாகுமரி கடற்கரை பகுதி பொழிவு இழந்து காணப்படுகிறது.

குறிப்பாக, பிரசித்தி பெற்ற விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே, குமரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு நீர்வீழ்ச்சியும், கொரோனா பரவலால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், நீர்வீழ்ச்சி பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Exit mobile version