சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று சாத்தப்படும்

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைவதையொட்டி, இன்று நடை சாத்தப்படுகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள், இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டபின், ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் காணப்பட்டது.

சன்னிதானம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக சபரிமலை கோயிலில் தொடக்கத்தில் பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இந்தநிலையில், மண்டல பூஜை இன்றிரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து, இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக, கோயிலின் நடை வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version