உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயர்ந்த கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ள காட்சிகள் பரவி வைரலாகி வருகிறது.
சைய் என்ற இளைஞர், உயர்ந்த கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி, படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். உலகின் பல உயரிய கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று, நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது, சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில், கம்பியின் அடிப்பாகத்தில் பாதங்களை விட்டு, பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு, அருகிலிருந்த சுவரின் விளிம்பில் இருந்து தலைகீழாகத் தொங்கியபடி கீவ் நகரின் அழகைக் காட்சிப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகின்றன.