உதகையில், கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், பாரம்பரியமிக்க மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி பறக்கும் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், வரும் 17-ம் தேதி பாரம்பரிய மலர் கண்காட்சியை நடைபெற உள்ளதால், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளதாகவும், இதன் காரணமாக முதல் முறையாக 5 பறக்கும் கேமராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 100 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க ஏதுவாக இருக்கும் இந்த கேமராக்கள் பயன்படும் என்றும் அதேபோல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வரும், 31ம் தேதி வரை, வழிதடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.