மதுரை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ரயில் போன்ற வடிவங்களில் வகுப்பறைகள் வண்ணம் தீட்டப்பட்டது மாணவ, மாணவிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
பார்ப்பதற்கு ரயில் நிறுத்தப்பட்டிருப்பது போன்ற ஓர் பிம்பம். பயணிகளைப் போல, ஆர்வமுடன் சென்று படிக்கும் இளம் மாணவர்கள். இந்த காட்சி 150 ஆண்டுகளைக் கடந்த, மதுரை ரயில்நிலையம் அருகே உள்ள டவுன் பிரைமரி என்னும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தான், காணக் கிடைக்கிறது. வகுப்பறை வெளிச்சுவர்களில் ரயில்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்று வண்ண நிறச் சாயங்கள் பூசப்பட்டிருப்பதே, மாணவர்களின் இந்த மாற்றத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதன்மூலம் அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, ஆர்வமுடன் கல்வி கற்கும் நிலைகளை உருவாக்க முடிகிறது என அப்பள்ளியினர் நம்பிக்கை தருகின்றனர்.