கோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்

கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்ட போர் பயிற்சி விமானத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் பீரங்கி, நீர்மூழ்கி கப்பல், ஏவுகணை உள்ளிட்டவைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,1977ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தாம்பரம் விமானப்படை தளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த போர் பயிற்சி விமானம் ஒன்று, கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 250 கிலோமீட்டர் செல்லும் இந்த போர் விமானமானது 25 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும். கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த போர் பயிற்சி விமானத்தை, ஏராளமான மாணவ – மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

Exit mobile version