சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களாக உள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்களை 2014 முதல் தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சியானது நடத்திவருகிறது. அதற்கு முன்பு வரை இந்தத் தேர்வினை உயர்நீதிமன்றமே நடத்தி வந்தது. தமிழ்நாடு தேர்வானையமானது எழுத்துத் தேர்வை நடத்தினாலும் நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவற்றினை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சியுடன் சேர்ந்து செய்கிறது. இதற்குமுன 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பிறகு 2019ல் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகளால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 56 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மூன்றாண்டுகளுக்கு பிறகு…!

கடந்த ஆண்டு  டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உத்தேச திட்டமிடல் கால அட்டவணையில், 245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனை ஒட்டி ஜூலை மாதம் முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது.  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 245 சிவில் நீதிபதி இடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 1 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி, ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இதன்பிறகு 5 முதல் 7ம் தேதி விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும், மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிப்பாணை வெளியானது.

கடைசி தேதியை ஜூன் 30லிருந்து நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி…!

இந்த நிலையில் சிவில் நீதிபதிகள் தேர்விற்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முனைவர் எஸ்.கே. கார்வேந்தன் என்பவர் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அவ்வழக்கின்படி, இந்தாண்டு சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களை தாக்கல் செய்ய முடியாததால் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமவர்வானது தக்க பதில் ஒன்றினைத் தந்தது.  அப்பதிலின்படி, மாவட்ட நீதிபதி தேர்வில் பங்கேற்பதற்உ மூன்றாண்டுகளுக்கு முன்பு சட்ட படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், இந்தாண்டில் படிப்பை முடிப்பவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது என்று  உயர்நீதிமன்றம் கூறியது.

 

Exit mobile version