நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுகவினர் அமோக வெற்றி

மேடவாக்கத்தில் நடந்து முடிந்த நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில், திமுக மற்றும் அமமுக படுதோல்வி அடைந்தது. அனைத்து இடங்களையும் கைப்பற்றி அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில், அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 19-ம் தேதி நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று, 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படது.

இதில், தலைவர், துணைத் தலைவர், இயக்குனர்கள் என அதிமுக வைச் சேர்ந்த 6 பேர் அமோக வெற்றி பெற்றனர். இதன் மூலம், மேடவாக்கம் நகர கூட்டுறவு சங்கத்தின் ஒட்டுமொத்த பதவிகளிலும், அதிமுகவினரே வெற்றிபெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version