புதுக்கோட்டையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குடிமராமத்து பணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நீர்நிலைகளை மேம்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கை அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்களும் தனியார் அமைப்பினரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஆட்சி தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடும் தனியார் அமைப்பினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version