நாட்டின் ஒற்றுமைக்காகவே குடியுரிமை சட்டத் திருத்தம் : மத்திய இணையமைச்சர்

நாட்டின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவுமே குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதாகவும், ஆனால் எதிர்கட்சிகள் அதை திசை திருப்புவதாகவும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
4D தொழில்நுட்பத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தின் வெளியீட்டு விழா, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் கலந்துக்கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தமிழக சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் எனவும், அதன் வெளிப்பாடாகத்தான் தமிழ்நாட்டில் பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவுமே குடியுரிமை சட்ட மசோதா திருத்தப்பட்டதாகவும், ஆனால் எதிர்கட்சிகள் இதனை திசைத் திருப்பி, போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெற்றால் மக்களுக்குத்தான் இழப்பு எனவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
 

Exit mobile version