கோத்தகிரி அருகே சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சமீப காலமாக ஒரு கரடி தனது குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. அங்குள்ள சோலூர் மட்டம் பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு சென்ற நடராஜன் என்பவரை அந்த கரடி கடுமையாக தாக்கியுள்ளது.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கரடியை விரட்டினர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.