ஜனவரி 31ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் தொடர்பான விவரங்களை கேட்டு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில், 6 சவரன் வரை அடமானம் வைத்து ஏழை மக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் தொடர்பான விவரங்களை கேட்டு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகைக்கடன் குறித்த விவரங்களை கூட்டுறவுத்துறை கேட்டுள்ளது. நகைக்கடன் நிலுவை விவரங்களை உரிய படிவத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.