தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால், 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுவதால், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து திரையரங்கு வளாகத்தை, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.