8 கோடிக்கு விஷால் உத்தரவாதம் அளிக்க உத்தரவு; தெலுங்கில் விஜய்சேதுபதி படம் – சினிமா செய்திகள்!

ஆக்சன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 8 கோடி ரூபாய்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்ஷன் படம் நஷ்டம் ஏற்பட்டால், படத்தை தயாரித்த TRIDENT ARTS நிறுவனத்துக்கு 8 கோடியே 29 லட்சம் ரூபாயை திருப்பித்தருவதாக நடிகர் விஷால் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதாக, படத் தயாரிப்பு நிறுவனத்தினர் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8 கோடியே 29 லட்ச ரூபாய்கான உத்தரவாதம் குறித்து நடிகர் விஷால், அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய் திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. மலையாள இயக்குநர் சனில் கலதில் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஜெயராம், ஆத்மியா ராஜன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் மார்கோனி மத்தாய்.ரேடியோ மீது தீவிர காதல் கொண்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் அழகான காதலுக்கு ரேடியோ எவ்வாறு உதவியாக உள்ளது என்பதே படத்தின் கதை. விஜய் சேதுபதி மலையாளத்தில் அறிமுகமான இப்படம் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியட உள்ளனர்.

 

Exit mobile version