ஓ.டி.டி.யில் ரிலீசாகும் நயன்தாரா படம்; காஜல் அகர்வாலுக்கு திருமணம் – திரைச் செய்திகள்!

வெப்சிரிஸீல் நடிக்கும் சித்தார்த்; நயன்தாராவின் படம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சித்தார்த் அடுத்ததாக இந்தி வலைதளத் தொடரில் நடிக்க உள்ளார். சித்தார்த் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியானது. டக்கர் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வரும் அவர், Escaype Live என்ற இந்தி வலைதளத் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டெக்கி த்ரில்லராக தயாராக உள்ள இத்தொடரை இந்தி இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்தார்த் குமார் திவேரி அபிஷேக் செங்குப்தாவுடன் இணைந்து இயக்க உள்ளார். ஐந்து இந்தியர்கள் ஒரு செயலி மூலம் விரைவாக பிரபலமடைய நினைக்கும்போது நடக்கும் பிரச்சனைகள்தான் இதன் கதை என சொல்லப்படுகிறது.

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தீபாவளிக்கு ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஸ்மிருதி வெங்கட், ஊர்வசி, மௌலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தீபாவளிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு 35 வயதாகிறது. இப்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவருக்கு, இண்டீரியர் டிசைனிங் நிறுவனத்தை நடத்திவரும் கௌதம் கிட்ச்லு என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Exit mobile version