கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடல்!!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவை தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில், மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், போன்றவற்றுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத் தலங்களையும் மூட உத்தரவிடப் பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவை ஏற்று கேரளாவில் மார்ச் 31 ஆம் தேதி வரை திரையரங்குகள் முடப்பட்டிருக்குமென திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version