சிகரெட்டின் தீமைகள்

சிகரெட்டின் தீமைகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிகரெட்டில் மொத்தம் 4,000-க்கும் அதிகமான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை.

சையனைடு, பென்ஸீன், மெத்தனால், அசிட்டிலின் – ஆகியவை சிகரெட்டில் காணப்படும் சில அபாயகரமான வேதிப் பொருட்கள் ஆகும்.

சிகரெட் புகையில் தார் இருக்கிறது, அது தவிர நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகிய இரண்டு விஷ வாயுக்களும் இருக்கின்றன. சிகரெட்டில் உள்ள நிகோடின் மனிதனை அடிமையாக்கக் கூடியது. இது மனிதனின் இரத்தம், நுரையீரல், மூளை ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது.

ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை விடவும் அதிகம் அடிமைப்படுத்தக் கூடியது நிகோடின் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. சிகரெட்டில் உள்ள வேதிப் பொருட்கள் மற்றும் விஷ வாயுக்கள் மனிதர்களை 25க்கும் மேற்பட்ட நோய்களின் இலக்காக மாற்றக் கூடியவை.

சிகரெட்டுகளுக்கு மாற்றாக ஈ-சிகரெட்டுகள் முன்மொழியப்பட்டாலும், அவையும் தீங்கானவையே என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். எனவே தீமையில்லாத சிகரெட் என்று எதுவும் இல்லை. சிகரெட் பழக்கம் வாழ்நாளில் 14 ஆண்டுகளைக் குறைக்கக் கூடியது. உடல் ஆரோக்கியத்தில் 50% இதனால் இழக்கப்படும். எனவே சிகரெட்டைக் கைவிடுங்கள், ஆரோக்கியத்தைக் கையில் எடுங்கள்.

Exit mobile version