ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் சியாரா புயலால் 135-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் உருவான சியாரா புயலால், நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றன. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால், இங்கிலாந்தில் மட்டும் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
நெதர்லாந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சுமார் 135க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரமும் தொடர்ந்து பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கியதால், அங்கு வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.