கோவளத்தில் தேங்காய்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த வாரம் டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடந்த 1ம் தேதியிலிருந்து வீடுகள், அலுவலகங்கள், தேவாலயங்களில் குடில், ஸ்டார், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவை அமைத்து  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு தேங்காய் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கோவளம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தேங்காய்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க பிளாஸ்டிக் பொருட்களை பலரும் தவிர்த்து வருகின்றனர். அந்தவகையில்,. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக தேங்காய்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. 12.5 அடி உயரம் கொண்ட இம்மரத்தில் 690 தேங்காய்களை பயன்படுத்தியுள்ளனர்.

Exit mobile version