சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி மகிழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு என தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஜெயலலிதா அவர்களின் வழியில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாயும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version