கிறிஸ்துமஸ் உணவுகளும் அதன் அர்த்தமும்.!

இன்னும்,  சில தினங்களில் கிறித்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போதே கேக், கிருஸ்துமஸ் மரங்கள் குடில் என கொண்டாட்டத்திற்கு  உலக முழுவதும் உள்ள கிருஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.

சில கிரேக்க பகுதிகளில் மட்டும் ஜூலியன் காலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனவரி 7ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக சில கத்தோலிக்க தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக ஒவ்வொரு நாட்டிலும் அதன் பாரம்பரிய உணவுகள் சமைத்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

போலந்து நாட்டில் ‘விகிலா’  எனும் உணவு கிறிஸ்துமஸ் உணவாக தயாரிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இத்தாலியில் 7 வகை மீன்கள், பயிறு சாப்பிடுவார்களாம். அப்படி செய்தால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்பானிஷ் நாட்டில் முட்டை, பாதாம், சர்க்கரை, தேன் கலந்து  ‘டூர்ரூன்’ என்கிற உணவு தயாரிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பெரும்பாலான வீடுகளில்  பிளம் கேக், வான்கோழி மாமிசம், ஜெல்லி புட்டு ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version