கிறிஸ்துமஸை முன்னிட்டு பிரேசில் அமைக்கப்பட்டுள்ள ‘மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்’

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர்-25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களது வீடு, அலுவலகம், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரேசில் ரியொடி ஜெனிரோ பகுதியில் உலோகங்களை கொண்டு 230 அடி உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கடியில் 11 தளங்களை ஏற்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த மரத்திற்கு, 9 லட்சம் எல்.இ.டி விளக்குகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையிலான வண்ணங்களில் ஒளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version