கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தனியார் ஹோட்டலில் பிரமாண்ட கேக் வடிவமைக்கப் பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கொடைக்கானல் நகரின் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெர்மன் சர்ச் வடிவத்தில் கேக் மற்றும் 25 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் கேக் உருவாக்க 15 ஆயிரம் ஜிஞ்சர் பிஸ்கட்கள் பயன்படுத்தப்பட்டதாக கேக் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரமாண்ட கேக்கை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கோவையில் காருண்யா பல்கலைக் கழகத்தில் 33 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒன்றிணைந்து இரண்டு நாட்களில் 33 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளனர். அந்த பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் அருகே நின்று மாணவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.