விடைபெறுகிறார் சூறாவளி கெய்ல்…

வரலாற்றில் சாதித்த ஒருவரின் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப்பார்த்தால் ஆரம்ப காலத்தில் அவருடைய பெயர் அதிகம் உச்சரிக்கப்படாத பெயராகத்தான் இருக்கும் …. ஆனால் பிற்காலத்தில் அந்த பெயர் எதிரணிகளை கலங்கடித்தவர்களின் பட்டியலில் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த கிறிஸ் கெயில்.

கரீபியன் தீவு அணியான மேற்கிந்திய தீவுகளில் விளையாடிவரும் இந்த வீரரின் பெயரும் ஆரம்ப காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கினர் கிறிஸ் கெயில். 1999ஆம் ஆண்டு முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் இவர் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் போட்டியில் சோபிக்க தவறியவர்கள் எல்லாம் பின் நாட்களில் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்தது . 2 ஆண்டுகள் நிதானமாக விளையாடி வந்த கெயில் முதல் முறையாக 2001 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

அதன்பிறகு சொல்லவா வேண்டும்….இவர் போட்டிகளில் களம் இறங்கினால் எந்தப் பக்கம் புயல் வரும் என தெரியாத அளவுக்கு ஆட்டம் இருந்தது. இவரது பேட்டில் படும் பந்து எந்த திசைக்கு செல்லும் என்பது எதிரணிக்கு மட்டுமல்ல, கெயிலுக்கே தெரியாது. 6 அடி உயரமான அவர் பேட் செய்யும் விதமே தனித்துவமானது. 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அனைத்து சர்வதேச போட்டிகளில் நான்கு சதம் மற்றும் 14 அரைசதம் அடித்து மொத்தம் 2013 ரன்களை குவித்தார்.

333 எண்ணுடைய ஜெர்சியுடன் அவர் களமிறங்கினால் ஏரியாவே அதிரும் அளவுக்கு ஆர்ப்பரிப்பார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 333 ரன்களும், ஒருநாள் போட்டியில் 215 ரன்களும், T20 போட்டிகளில் 117 ரன்களும், IPL போட்டிகளில் 175 ரன்களும் என இந்த உயர மனிதனின் சாதனை உயரங்களுக்கு அளவே இல்லை.

பந்துவீச்சிலும் அசத்தும் கெயில் டெஸ்ட் போட்டிகளில் 73 விக்கெட்டுகளும்,ஒருநாள் போட்டியில் 165 விக்கெட்டுகளும், T20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும், IPL போட்டிகளில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் இந்த ஆல்-ரவுண்டர்.

கெயிலுக்கு சிக்ஸர் மன்னன் என்ற பெயரும் உண்டு. அவர் அடிக்கும் ரன்களில் முக்கால்வாசி ரன்கள் பவுண்டரிகள் தான். அதிலும் சிக்ஸர்கள் தராளமாக பறக்கும். இவரின் ஆட்டத்தினை பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றாக வேடிக்கை காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அதிரடிக்கு பெயர் போனவர் கிறிஸ் கெயில்.

தற்போது கிறிஸ் கெய்ல் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்த நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடவுள்ளார். அவரின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புயலுக்கு பின் கூட அமைதிக்கு இடமுண்டு . ஆனால் இந்த “Gayle Storm” என்கிற புயலில் அந்த அமைதி என்ற வார்த்தைக்கு கூட இடமில்லைகெயிலுக்கு சிக்ஸர் மன்னன் என்ற பெயரும் உண்டு. அவர் அடிக்கும் ரன்களில் முக்கால்வாசி ரன்கள் பவுண்டரிகள் தான். அதிலும் சிக்ஸர்கள் தராளமாக பறக்கும். இவரின் ஆட்டத்தினை பார்க்கும் ரசிகர்களுக்கு நன்றாக வேடிக்கை காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அதிரடிக்கு பெயர் போனவர் கிறிஸ் கெயில்.

தற்போது கிறிஸ் கெய்ல் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்த நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடவுள்ளார். அவரின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version