"சித்ரா தற்கொலை – முழு விசாரணை தேவை"

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணை அதிகாரியை நியமித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சித்ரா தற்கொலையில் வழக்கில் சந்தேகம் இருப்பதாக, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சித்ரா இறப்பதற்கு முந்தைய நாள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக திருமண மண்டபத்தை மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றதாகவும், அதற்கான சிசிடிவி ஆதாரத்தை ஆணையரிடம் வழங்கியதாகவும் கூறினார். ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறும் நிலையில், தனது மகன் கைது செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், சித்ரா மதுபழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மூன்று பேரை காதலித்தார் என பல்வேறு வதந்திகள் பரவும் நிலையில், அதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் ஆணையரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மேலும் சித்ரா இறந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ரவிச்சந்திரன் கூறினார்.

 

Exit mobile version