பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள பிரமாண்ட கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.