கமுதி அருகே சித்திரை மாத ஏர் தழுவுதல் விழாவை விவசாயிகள் சிறப்பாக கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அமைந்துள்ளது கீழராமநதி கிராமம். இங்கு நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், தமிழ் முதல் மாதமான சித்திரையில் ஏர்தழுவுதல்பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது . மாடுகளை அலங்காரம் செய்தும், ஏர் கலைப்பைகளுக்கு மஞ்சள் தேய்த்து, வெற்றிலை தோரணம் கட்டியும் விவசாயிகள் பூஜை செய்தனர். கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று வயல்களில் ஏர் பூட்டி விவசாயிகள் உழுதனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என அவர்கள் மனதார வேண்டிக் கொண்டனர்.